
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனைக்கு (21.08.23 ) அன்று மாலை காரைக்குடி செக்காலை பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி மோதிரத்தை விழுங்கி விட்டதாக அழைத்து வந்தனர். விழுங்கிய மோதிரத்தை வெளியே எடுக்க அவர்கள் வீட்டில் பலவழிகளில் முயற்சி செய்தும் எடுக்க முடியாமல் மருத்துவமனைக்கு கூட்டி வந்தனர்.
சிறுமியை பரிசோதித்த அப்பலோ ரீச் மருத்துவமனை மருத்துவர்கள் மோதிரம் வயிற்றில் சிக்கியிருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து சிறுமிக்கு இலேசான மயக்க மருத்து கொடுத்து அறுவை சிகிச்சையில்லாமல் எண்டோஸ்கோபிக்( ENDOSCOPIC FOREGN BODY RETRIVEL) முறையில் மோதிரத்தை வெளியே எடுத்தனர். இரவு முழுக்கண்காணிப்பில் சிறுமியை வைத்து பரிசோதித்து இன்று காலை 22.08.23 பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ளார்.
சிறுமிக்கு அப்பலோரீச் மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர்.சதீஷ்,டாக்டர் கலாராணி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு தீவிர சிகிச்சையளித்து அறுவை சிகிச்சையில்லாமல் மோதிரத்தை வெளியெ எடுத்து சாதனை புரிந்துள்ளனர். அப்பலோ ரீச் மருத்துவமனையில் முதன்முறையாக இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்