முக்கிய செய்திகள்

9 ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் செங்கோட்டையன் தகவல்..


நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 9 ம் வகுப்புக்கு புதிய பாடத் திட்டம் விரைவில் உருவாக்கப்பட உள்ளது. 12 ம் வகுப்பு முடித்தவுடன் மாணவர்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தட்டுப்பாடு இல்லாத அளவுக்கு மின்சாரம் தர துடிப்போடு அமைச்சர் தங்கமணி செயல்படுகிறார். ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் ரூ.27,000 கோடி பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.