Manimaran’s article
__________________________________________________________________________________________________
கடந்த தேர்தலின்போது கலைஞரை காரசாரமாக விமர்சித்து வெளியிட்டிருந்த கார்ட்டூன்களை ‘தினமணி’யில் தற்போது உற்சாகம் பொங்க மீண்டும் வெளியிட்டு வருகிறது… வைத்தியநாதன் – மதி அன்கோ.
மத்தியிலும், மாநிலத்திலும் திமுக அதிகாரத்திலிருந்த அன்றைய காலக்கட்டத்தில் கலைஞரின் செயற்பாடுகளை விமர்சித்து கார்ட்டூன்களை வெளியிட்டதில் தப்பேயில்லை.
ஆனால் 5 ஆண்டுகள் கழித்து இப்போது அவற்றை நாள்தோறும் ’வைத்தி-மதி’ வகையறா மீண்டும் வெளியிடுவதற்கு ’வக்கிரம்’ ஒன்றைத் தவிர வேறு காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
பழசை கிண்டிக்கிளறும் ’வைத்தி’, நடப்பு ஆட்சிகளின் ( மத்திய-மாநில) அவலங்களை, அத்துமீறல்களை, அடாவடிகளை தலையங்கத்திலோ, மதி கார்ட்டூனிலோ இதுவரை ஒருமுறை….ஒரே ஒருமுறை தட்டிக்கேட்டதுண்டா?
இந்த லட்சணத்தில் ‘நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள்’….என நாள்தோறும் பிரசுரிக்க கொஞ்சம்கூட வெட்கமில்லையா?
ஆதரவு நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்துவிட்டு என்ன எழவையும் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் நடுநிலை என்ற போர்வையில் ஏன் இந்த நயவஞ்சகம் வைத்தி? ஊருக்கு ஊர் போய் தார்மீக நெறிமுறைகள் பற்றியெல்லாம் எப்படி உங்களால் கூச்சமில்லாமல் பேச முடிகிறது?
சொக்கலிங்கம், சிவராமன், சம்பந்தன் போன்ற நடுநிலை தவறாத ஜாம்பவான்களின் கைகளில் தவழ்ந்த ‘தினமணி’ இந்த மாதிரியான வக்கிரம் கலந்த நச்சுப் பேர்வழிகளிடம் சிக்கியிருப்பதைக் கண்டு…..அதன் நீண்டகால வாசகர் என்ற முறையில் மிகவும் வருத்தப்படுகிறேன்.
_________________________________________________________________________________________________________