DMK men Slams the leaders who speak about political decency
_____________________________________________________________________
முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதலாக தமிழகத்தில் அரசியல் நாகரிகம் திடீரென தலைவிரித்தாடத் தொடங்கி இருக்கிறது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூட டெல்லியில் இருந்து பறந்து வந்து, தமிழகத்தின் அரசியல் நாகரிகத்திற்கு வலுச்சேர்த்துச் சென்றுள்ளார்.
இந்த நிலையில்….
2009இல் அப்போதைய முதல்வர் கலைஞர் மருத்துவமனையில் முதுகுத்தண்டு அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, இங்குள்ள அரசியல் தலைவர்கள் பேசிய மனிதாபிமான சொற்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஜெயலலிதா:* காவிரி பிரச்சினையை சந்திக்க திராணியற்று இன்று ஓடிப்போய் படுத்துக்கொண்டிருக்கிறார் தீயசக்தி. மனைவியார் துணைவியார்களோடு இவர் ஒய்வெடுக்கும் வேலையில் தமிழகத்தில் உரிமைகள் பறிபோய்கொண்டிருக்கிறது. தீயசக்திதான் 2ஜியில் அடித்த கொள்ளையை ஒதுக்க ஒதுங்கியுள்ளார் எனில் இந்த அமைச்சர்கள் ஏன் அங்கயே நிற்கிறார்கள் என எண்ணவேண்டாமா? மத்திய அமைச்சர்கள் வந்து பார்த்துவிட்டு பின்பக்கமாய் ஓடுகிறார்களே… என்ன கொடுக்க வந்தார்கள்… இல்லை வாங்க வந்தார்கள் என தமிழக மக்கள் கேட்கிறார்கள்…. இந்த தீயசக்தியை மூட்டையாக கட்டி தூக்கி சென்று அரசின் பணத்தில் உல்லாசமாய் மருத்துவம் பார்க்க மக்கள் வாடுவேண்டுமா? இதைத்தான் அன்றே சொன்னார் மக்கள் திலகம் எம்ஜியார் அவர்கள் இந்த தீயசக்தியின் குடும்ப ஆட்சியை ஒழித்திடவேண்டுமென்று.
வைகோ:* கருணாநிதியின் சதி விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. காவிரியில் நீர் வராதா என காய்ந்த வயிறுகளோடு காத்திருக்கிறான் விவசாயி.. இவர் பணக்காரர்கள் சிகிச்சையெடுக்கும் பணம் பெருத்தோர் மருத்துவமனையில் படுத்திருக்கிறார்… இவர் மட்டுமா ஒட்டுமொத்த நிர்வாகமே படுத்திருக்கிறது. நாடெங்கும் கொலை கொள்ளைகள், காவிரிபிரச்சினை மீத்தேன் குழாய் வெடிப்பு என மக்கள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்.. இவரோ உல்லாசமாய் படுத்துக்கொண்டிருக்கிறார்… நாளொரு செய்தி பொழுதொரு வண்ணமாய் வந்துகொண்டிருக்கிறது… தமிழ்நாடு தலையற்று நிற்கிறது இந்த குடும்ப ஆட்சியில்… இதையெல்லாம் எதிர்காலத்தில் சொல்வேன் என்றுதான் என்னை துரோகி பட்டம் கூறி வெளியேற்றினார்கள்.. ஆனால் துவண்டுவிடவில்லை…
சீமான்:* இல்ல நான் தெரியாமத்தான் கேட்கிறேன்… நாட்ல அவனவன் அடுத்த வேலைகஞ்சிக்கே வழியில்லாம இருக்கான். அரசு மருத்துவமனைகளில் நிற்க வழியில்லாது விழுந்து கிடக்கிறான் தமிழன்… இவர் கோடீஸ்வரர்கள் பார்க்கும் மருத்துவமனையில் படுத்துகிட்டு… நல்லாயிருக்காரு நல்லாயிருக்காரு செய்தி வருது. நல்லாயிருந்தா போய் வேலை பாருங்க… எதுக்கு இந்த நாடகம். என் அண்ணன் பிரபாகரன் தன் உடல் நிலை நலிவுற்று இருந்த போதும்… என்னை வரவேற்க எழுந்த நின்றாரே அது தமிழ் ரத்தம். என் இனம் இன்று சொரணையற்று நிற்கிறதே… இதை மீட்க வேண்டாமா ? இத யாராச்சும் கேட்பீங்களா… நா கேட்பேன். என் தம்பி கேட்பான்.
காவிரி பிரச்சினை 2ஜி தீர்ப்பு ஓடி ஒளிந்துகொண்டார் கருணாநிதி. – #தினமலர்
இன்னைக்காச்சும் நல்ல செய்தி ஏதும் வருமா ? – #தினமணி மதி கார்ட்டூன்.
தீய்சக்தியின் நாடகம் அரங்கேற்றமா ? ஜெயா கேள்வி – #தினதந்தி…
இப்போது ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது, அவர் பூர்ணநலம் பெற கலைஞரும், ஸ்டாலின் அவர்களும் வாழ்த்து செய்தி தெரிவித்திருப்பதை தமிழக மக்களும் அரசியல் நாகரீகம் விரும்புவோரும் புரிந்து கொள்ளவேண்டும்.
_____________________________________________________________________