திமுக தலைவர் கருணாநிதி அறக்கட்டளை’க்காக, திமுக தலைவர் கருணாநிதி, தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக்கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.
வைப்பு நிதியாக போடப்பட்ட ஐந்து கோடி ரூபாயில், 30வது புத்தகக்கண்காட்சியினை 10.1.2007 அன்று திறந்து வைத்து தலைவர் கலைஞர் பேசுகையில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள நான்கு கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.
2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ. 4 கோடியே 43 லட்சத்து 90 ஆயிரம். மேலும் தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால் 2017, அக்டோபர் மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2,00,000/- (இரண்டு லட்சம்) 17-11-2017 அன்று வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது.
நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக இதுவரை ரூ. 4 கோடியே 43 இலட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது
2012 சூன் மாதம் முதல் உதவித் தொகை ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும் 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து ரூபாய் 25 ஆயிரமாக உயர்த்தியும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்று ரூ.2,00,000/- கலைஞர் வழங்கினார்.
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நிதி உதவி பெறுவோர் விவரம்:
1 . செ.தங்கராஜ், புஷ்பா நகர், நுங்கம்பாக்கம், சென்னை மேற்கு மாவட்டம் – 25,000/-
2 . வி.நித்தியானந்தம், காந்தி கணவாய்,
கொண்டசமுத்திரம் ஊராட்சி, ராமலை அஞ்சல், வேலூர் மாவட்டம் – 25,000/-
3 . எஸ்.கணேசன், வடக்கு வீதி,
திருவிடைமருதூர்-612104, தஞ்சை வடக்கு மாவட்டம் – 25,000/-
4 . என்.ஜெயக்குமார், வி.பி.கோவில் புதுத் தெரு,
மானம்புச்சாவடி, தஞ்சாவூர்-613001 – 25,000/-
5 . கு.கந்தசாமி, அண்ணாபேட்டை அஞ்சல்,
வேதாரண்யம், நாகை மாவட்டம்-614714 – 25,000/-
6 . துரை.தென்னரசு, வடக்கு தெரு, நடராசபுரம் அஞ்சல்,
திருவெறும்பூர் வழி, திருச்சி மாவட்டம் – 25,000/-
7 . க.குஞ்சிதபாதம், கடை வீதி, ஜெ.கே.எம். ரோடு,
உடையார்பாளையம், அரியலூர் மாவட்டம்-621804 – 25,000/-
8 . க.கிருஷ்ணன், சிங்காரவேலன் தெரு, ஜோதி நகர்,
ஆத்தூர் அஞ்சல், சேலம் மாவட்டம்-636102 – 25,000/-
மொத்தம் ரூ. 2,00,000/-