ஆன்லைன் புக்கிங்குக்கும் இனி ஆதார் தேவையாம்!

பொருட்கள் வாங்குவது முதல் வாடகைக் கார்களை அழைப்பது வரை அனைத்துமே தற்போது ஆன்லைன் பரிவர்த்தனை வளையத்திற்குள் வந்துவிட்டன. இந்நிலையில், மற்ற அனைத்துத் துறைகளிலும் படிப்படியாக கட்டாயமாக்கப்பட்டு வரும் ஆதார் எண் பதிவு, இனி ஆன்லைன் பரிவர்த்தனைக்கும் அவசியம் என்ற நிலை உருவாகி உள்ளது. பெங்களூருவை மையமாகக் கொண்டு வரும் ஜூம் கார் என்ற வாடகைக் கார் நிறுவனம், தற்போது வாடிக்கையாளர்கள் பதிவுக்கு ஆதார் எண்ணை அளிக்க வேண்டியது கட்டாயம் எனத் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஆதாரும் தற்போது வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்ணைக் கோரிப் பெறத் தொடங்கி உள்ளதாக அந்நிறுவனத்தின் இந்தியாவுக்கான செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருப்பதாக தி எகனாமிக் டைம்ஸ் ஏடு தெரிவித்துள்ளது. ஆனால், அது இல்லாத பட்சத்தில் அரசு வழங்கிய வேறு ஏதேனும் அடையாளச்சான்றை அளிப்பதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு அமேசான் வழங்குகிறது. விரைவில் ஆதாரைத் தவிர வேறு எதையும் ஏற்க மாட்டோம் எனக் கூறும் நிலை உருவாகலாம்.

மொபைல் போன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படும் பேடிஎம் நிறுவனம் ஆதார் எண் அடையாளச் சான்றைக் கட்டாயமாக்கி உள்ளது. ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களும் ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

Online firms are also asking Aadhar

ஆர்கே நகரில் அதிமுக வேட்பாளர் யார்?: முடிவெடுக்கக் கூடியது அதிமுக ஆட்சிமன்றக் குழு!

தென் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வுமையம்!

Recent Posts