புதுக்கட்சி தொடங்க விஷால் திட்டமா?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனு விவகாரம் குறித்து இன்று (புதன் கிழமை) மீண்டும் விஷால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது புதுக்கட்சியைத் தொடங்க திட்டமா என்று செய்தியாளர்கள் கேள்விக்கு நேரடியாக எந்தப் பதிலும் கூறாத விஷால் முதலில், இந்த விவகாரத்திற்கு  தீர்வு காண வேண்டும் எனக் கூறினார். இதில் இருந்து புதிய கட்சியை தொடங்கும் எண்ணம் அவருக்கு இருப்பதை அறிய முடிவதாக ஊடகத்தினர் கூறுகின்றனர்.

ஆர்கே நகர் விவகாரம் குறித்து, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பபட்டு வருவதாகவும்,  தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப் போவதகாவும் கூறினார். எனது வேட்பு மனுவை நிராகரித்த பின்னரும் முன்மொழிந்த பெண்ணை மிரட்டுவதை கைவிட்டு, அங்கிருந்து அந்தக் கும்பல் செல்ல வேண்டும் எனவும் விஷால் அப்போது வலியுறுத்தினார். ஆர்.கே.நகர் பிரச்சனையால் மக்களுக்கு நன்மை செய்வதில் இருந்து என்னை யாரும் தடுத்துவிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இதில் இருந்து, அடுத்த கட்டமாக தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு விஷால் திட்டமிட்டிருப்பது தெரிகிறது என்றே செய்தியாளர்கள் கூறுகின்றனர். 

தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்குமாறு இலங்கை எம்.பி பேச்சு..

“விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது ஜனநாயக படுகொலையாகும்” : இயக்குநர் அமீர்..

Recent Posts