காஷ்மீர் மாநிலத்தின் இந்தியா-சீனா எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4:28 மணிக்கு லே பகுதியில் இருந்து கிழக்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியிருந்ததாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பூமிக்கடியில் 33 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் கூடினர். இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என தெரிகிறது. இருப்பினும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
நேற்று இரவும் இதே பகுதியில் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.