டெங்கு பாதிப்பு; தமிழகத்திற்கு முதலிடம்..


இந்திய அளவில் டெங்கு பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தொிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னா் தமிழகத்தில் ஏற்பட்ட டெங்கு காய்ச்சலுக்கு மாநிலம் முழுவதிலும் 21 ஆயிரத்து 350 போ் பாதிக்கப்பட்டனா். இது நாட்டிலேயே மிகவும் அதிகளவாகும். 2014ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலுக்கு 2 ஆயிரத்து 804 பேரும், 2015ம் ஆண்டில் 4 ஆயிரத்து 535 பேரும் பாதிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2016ம் ஆண்டில் தமிழகத்தில் 2 ஆயிரத்து 531 போ் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 21 ஆயிரத்தை தாண்டியிருப்பதாக மத்திய அரசின் அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 482 போ் பாதிப்புக்குள்ளாயினா். கேரளாவில் மட்டும் 19 ஆயிரத்து 695 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டதாகஅந்த அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.


 

அரசியல் என்பது மக்களுக்கானது:காங்., தலைவராக பொறுப்பேற்ற ராகுல் பேச்சு

ராகுலுக்கு ட்விட்டரில் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Recent Posts