சனிப்பெயர்ச்சி பெருவிழா : திருநள்ளாரில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

சனிப்பெயர்ச்சி பெருவிழா


சனிப்பெயர்ச்சி இன்று(டிச.,19) நடைபெறுவதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சனிபகவான் இன்று பெயர்ச்சியாகிறார். இன்று காலை 9:59 மணி முதல் 10:02 மணி வரை சனிப்பெயர்ச்சி நடக்கிறது. இதனையொட்டி திருநள்ளாறு, குச்சனூர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திருநள்ளார்

சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற திருநள்ளாரில் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு அதிகாலை 2 மணி முதல் பக்தர்கள் நளன் குளத்தில் நீடாடி சனிஸ்வர பகவானை தரிசித்து வருகின்றனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் சிறப்பாக செய்துள்ளது. பாதுகாப்பு பணியில் 1300 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இன்று மட்டும் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்புள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


 

பாஜகவை தனிமனிதனாக எதிர்த்து தனிமனிதராக போராடியவர் ராகுல்: குஷ்பு..

கடலில் தத்தளித்த 10 தமிழக மீனவர்கள் மீட்பு..

Recent Posts