Party Name | Candidate | Votes |
---|---|---|
IND | T T V Dhinakaran | 89,013 |
AIADMK | E. Madhusudhanan | 48,306 |
DMK | N. Marudhu ganesh | 24,651 |
NTK | K. Kalaikottuthayam | 3,860 |
BJP | K. Nagarajan | 1,417 |
NOTA | NOTA | 2,373 |
ஆர் கே நகர் இடைத்தேர்தலில் இரட்டை இரட்டை இலைச் சின்னத்தையே வீழ்த்தி வெற்றிவாகை சூடியுள்ளார் டிடிவி தினகரன். சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், 89, 013 வாக்குகளை பெற்ற வெற்றி அமோக வெற்றியை ஈட்டி உள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, ராணி மேரி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையிலேயே இருந்தார்.
ஒவ்வொரு சுற்றிலும் ஏறத்தாழ 50% வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த டிடிவி தினகரன், இறுதிச் சுற்று எண்ணிக்கையின் படி 89, 013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்த படியாக அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306வாக்குகள் பெற்றுள்ளார். மதுசூதனனை விட 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளார். 24,651 வாக்குகளைப் பெற்று திமுக வேட்பாளர் மருதுகணேஷ் மூன்றாவதாக இடத்தில் உள்ளார். நான்காவதாக வந்துள்ள நாம்தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயன் 3860 வாக்குகளும், 5 ஆவது இடத்தில் வந்துள்ள பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 1417 வாக்குகளும் பெற்றுள்ளனர். யாருக்கும் வாக்களிக்க விரும்பமின்றி பேர் நோட்டாவுக்கு 2373 பேர் வாக்களித்துள்ளனர்.
RK Nagar Vote Details