தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8ஆம் தேதி கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.
பன்வாரிலால் ஆளுநராக பதவியேற்ற பின், முதல் முறையாக உரையாற்றுவது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் உரை தொடர்பான விவாதங்கள் மட்டுமே இடம்பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து, அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏவாக டிடிவி தினகரன் நாளை பொறுப்பேற்கிறார்.
இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பது முக்கியத்துவம் பெறுகிறது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு பின், முதல் முறையாக சட்டப்பேரவை கூடுகிறது.
சட்டப்பேரவை எத்தனை நாள் நடைபெறும் என்பது 8-ந் தேதி சட்டப்பேரவை நிலைக்குழு முடிவு செய்யும்.