வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு : நாளை முதல் மழைக்கு வாய்ப்பு..


தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளதால் தமிழக கடலோரங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரங்களில் ஓரிரு இடங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று வறண்ட வானிலை காணப்படும். வடக்கிழக்கில் இருந்து நிலக்காற்று வீசுவதால் இரவில் குளிர்ந்த நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெ., வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் : ஆளுநர் பன்வாரிலால் ..

பேருந்து ஸ்டிரைக் 5-வது நாளாக நீடிப்பு: அரசுக்கு வருவாய் இழப்பு அதிகரிப்பு..

Recent Posts