தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் ரூ 25 ஆயிரம் மானிய விலையில் இருசக்கரவாகனம் வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் அடிப்படையில் முறைசாரா பணியிலுள்ள பெண்கள், கடைகள் மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பெண்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்கள் பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பிறந்த தேதிக்கான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை,வாகன ஓட்டுனர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் சமர்பிக்கப்பட வேண்டும். இதற்கான விண்ணப்பம் ஊராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
அதே நேரத்தில் பிப்ரவரி 5 ந்தேதி விண்ணப்பிக்ககடைசி நாள் என்று கூறியுள்ளனர். இதனால் மானியம் கிடைக்கிதோ இல்லையோ அரசு அறிவித்த நாள் முதல் தமிழகத்தில் உள்ள பெண்கள் அம்மா இருசக்கர வண்டி வாங்க அந்த பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுத்துவருகிறார்கள்.
இந்நிலையில் மானியம் பெற முக்கிய ஆவனமாக வாகன ஓட்டுனர் அடையாள அட்டை வேண்டும் என்று கூறியதால் பெண்கள் ஆர்டிஓ (போக்குவரத்து வட்டார) அலுவலகத்தில் அலைமோதி வருகிறார்கள். காலை 9 மணிக்கு வரும் பெண்கள் மதியம் 2 மணிவரை கூட்டத்தில் சிக்கி தங்களது ஓட்டுனர் அடையாள அட்டைக்கு பதிவு செய்து வருகிறார்கள். இதில் சில பெண்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு மதியம் சாப்பாட்டுடன் வந்து 2 மணிவரை கூட்டத்தில் காத்திருந்து பயிற்ச்சி ஓட்டுனர் பழகுனர் உரிமத்தை (எல்எல்ஆர்) பதிவு செய்துவிட்டு மாலை பள்ளியிலிருந்து பிள்ளைகளை அழைத்து செல்கிறார்கள்.
இந்த திட்டம் அறிவித்த நாள் முதல் ஆர்டிஒ அலுவலகங்களில் அன்றாட வேலைகளை பார்க்க முடியவில்லை. கூட்டத்தை சமாளித்து அனுப்புவதற்காக அலுவலகத்தில் உள்ள அனைவரும் இந்த வேலையை தான் செய்கிறோம். ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆள்பற்றாக்குறை உள்ளது. இதுபோல நேரங்களில் அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்தால் பெண்கள் கூட்டதை காத்திருக்கவைக்காமல் விரைவில் அனுப்பமுடியும் என்று ஆர்டிஒ அலுவலகத்தில் உள்ள அலுவலகர்கள் கூறுகிறார்கள்.
,இதுகுறித்து மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் பா.ஜான்சிராணி கூறுகையில், அம்மா வண்டி திட்டத்திற்கு விண்ணபிக்க காலநீட்டிப்பு செய்யவேண்டும், அதே நேரத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு விண்ணபிக்கும் போதே ஓட்டுனர் உரிமம் வேண்டும் என்ற விதியை தளர்த்த வேண்டும். தமிழகத்திலுள்ள பெருபான்மை மாற்றுதிறனாளிகளுக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை. அவர்களுக்கு மானியம் உரிதாகி கடன் வழங்கும் போது ஓட்டுனர் உரிமத்தை கேட்க வேண்டும் என்று கூறினார்.