Central Bureau of Investigation (CBI) arrested Vipul Ambani, close associates of Nirav Modi
நிரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸி நிறுவனங்களைச் சேர்ந்த விபுல் அம்பானி உட்பட மூத்த செயலதிகாரிகளை சிபிஐ கைது செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல்வங்கியில் ரூ.11,400 கோடி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்து வைர வியாபாரி நிரவ் மோடி மோசடி செய்ததாக அந்த வங்கி சிபிஐயிடம் புகார் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிபிஐ அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், நிரவ் மோடியின் ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது அமலாக்கப்பிரிவு.
இந்நிலையில் நிரவ் மோடியின் நிறுவனத்தில் நிதிநிலவரங்களைக் கையாண்டு வந்த உயரதிகாரி விபுல் அம்பானி உட்பட 5 அதிகாரிகளை சிபிஐ இன்று கைது செய்துள்ளது. இவர்களை விசாரணைக்கு அழைத்து கேள்விகள் கேட்ட பிறகு கைது செய்துள்ளது சிபிஐ.
விபுல் அம்பானி, மறைந்த தீருபாய் அம்பானியின் உறவினர் என்று தெரிகிறது, இவருடன் சேர்த்து நிறுவனத்தின் 5 அதிகாரிகளையும் பிஎன்பி வங்கியின் 11 அதிகாரிகளையும் நிரவ் மோடி மோசடி தொடர்பாக விசாரணை செய்தது சிபிஐ.
சிபிஐ-யினால் விசாரிக்கபட்ட வங்கி அதிகாரிகள் ஏற்கெனவே இடைநீக்கம் செய்யப்பட்டவர்களாவர் இவர்களுடன் சேர்த்து வங்கியைச் சேர்ந்த 8 அதிகாரிகளும் விசாரிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நிரவ் மோடியின் மூத்த செயலதிகாரியான விபுல் அம்பானி உட்பட 5 அதிகாரிகளை சிபிஐ கைது செய்துள்ளது.