பிரான்ஸ் அதிபர் மக்ரோன் இந்தியா வருகை : உற்சாக வரவேற்பு..

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தடைந்தார்.

புதுடெல்லியிலுள்ள விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தடைந்த பிரான்ஸ் அதிபர் மக்ரோனை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகச் சென்று வரவேற்றார்.

மக்ரோனுடன் அவரது மனைவி ப்ரிஜித் மற்றும் அந்நாட்டின் மூத்த அமைச்சர்கள் உடன் வந்திருந்தனர்.

இதுகுறித்து இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவுக்கு வரவேற்கிறேன். உங்களுடைய வருகை இந்தியா – பிரான்ஸ் இடையே உறவை மேலும் வலுப்படுத்தும். உங்களுடனான சந்திப்பை எதிர்நோக்கி உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

சந்திப்பின் முக்கிய நிகழ்வுகள்

பிரதமர் மோடி – பிரான்ஸ் அதிபர் மக்ரோனுடனான சந்திப்பில் இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவது, குறிப்பாக கடல் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவவை முக்கியதுவம் பெறவுள்ளன.

பிரான்ஸின் உதவியுடன் ஜெய்பூரில் அமையப்படவுள்ள ஜைதாபூர் அணுமின் நிலையத்தின் ஒப்பந்தம் கையெழுதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோடியுடனான சந்திப்புக்கு பிறகு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், டவுன் ஹாலில் நடைபெறும் மாணவர்களுடனான உரையாடலில் பங்கு பெறுகிறார்.

மார்ச் 11-ம் தேதி இந்தியா – பிரான்ஸால் முன்நின்று நடத்தும் சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணி தொடர்பான மாநாட்டில் பங்கேற்கிறார்.

மார்ச் 12-ம் தேதி பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசிக்கு சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார் மக்ரோன்.

மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்பு : மீனவர்களுக்கு எச்சரிக்கை..

எலும்பும் தோலுமான நடிகை ஹன்சிகா : அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Recent Posts