பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை பறிமுதல் செய்த நிரவ் மோடியின் நிலத்தில் விவசாயிகள் விவசாயத்தைத் தொடங்கியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கர்ஜாட் டெஹ்சில்லில் உள்ள கந்தாலா என்ற இடத்தில் மாடுகள் பூட்டிய ஏருடன் 200 விவசாயிகள் நிலத்தை உழுது வருகின்றனர். சிலர் டிராக்டர்களை அங்கு நிறுத்தி வைத்து அது தங்களுக்குச் சொந்தமான நிலம் என்று உரிமை கோருகின்றனர்.
125 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த இடத்தில் விவசாயத்தைத் தொடங்கப்போவதாக அந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அந்த நிலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடிக்குச் சொந்தமான ஃபயர் ஸ்டார் நிறுவனத்தால் சில ஆண்டுகளுக்கு முன் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.