செல்பேசியில் இணையதளம் வாயிலாகத் தரவிறக்கம் செய்யும் வேகத்தில் உலக அளவில் இந்தியா 109ஆவது இடத்தில் உள்ளது. ஊக்லா என்னும் நிறுவனம் உலக அளவில் இணையதளம் தரவிறக்க வேகத்தின் அடிப்படையில் தரவரிசையை வெளியிட்டுள்ளது.
உலக அளவில் செல்பேசியில் இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில் தரவிறக்கத்தின் வேகத்தில் உலகில் 109ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. சராசரி தரவிறக்க வேகம் 2017 நவம்பர் மாத நிலவரப்படி நொடிக்கு எட்டு புள்ளி எட்டு மெகாபைட்டாகவும், 2018 பிப்ரவரி நிலவரப்படி நொடிக்கு 9மெகாபைட்டாகவும் இருந்தது.
நொடிக்கு 62மெகாபைட் தரவிறக்க வேகத்துடன் இந்தப் பட்டியலில் நார்வே முதலிடத்தில் உள்ளது. கம்பிவழி இணையத்தளத் தரவிறக்க வேகத்தில் நொடிக்கு இருபது மெகாபைட்டுடன் இந்தியா 67ஆவது இடத்தில் உள்ளது. இந்த வகையில் நொடிக்கு 161மெகாபைட் வேகத்துடன் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது