கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் 2018 : பி்வி.சிந்து கொடியேந்தி இந்திய வீரர்கள் அணிவகுப்பு..


India’s pvsindhu led the Indian contingent at the Parade of the Nations during the GC2018 opening ceremony


ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியது. ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, கென்யா, மலேசியா உள்ளிட்ட 71 நாடுகளை சேர்ந்த சுமார் 6, 600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். அதிகபட்சமாக போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா சார்பில் 471 பேர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் இந்திய அணி வீரர்கள் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து கொடியேந்தி வர பின்னால் அணிவகுத்து வந்தனர்.
இதற்கு அடுத்தப்படியாக இங்கிலாந்து 396 பேரை களமிறக்கி உள்ளது. இந்தியா சார்பில் மொத்தம் 219 வீரர், வீராங்கனைகளை உள்ளடக்கிய அணி பங்கேற்கிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இம்முறை மொத்தம் 19 விளையாட்டுகளில் 275 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. மகளிர் பிரிவில் ரக்பி, பீச் வாலிபால் ஆகிய போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தியா 14 போட்டிகளில் களமிறங்குகிறது. வழக்கம் போல் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகியவற்றில் இந்தியா ஆதிக்கம் செலுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுடன் பாட்மிண்டன், ஸ்குவாஷ், பளு தூக்குதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுல், எட்டி எறிதல், டேபிள் டென்னிஸ் ஆகியவற்றிலும் இந்திய போட்டியாளர்கள் பதக்கம் வெல்ல வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. மேலும் ஹாக்கியில் ஆடவர் பிரிவில் இந்திய அணி பதக்கம் கைப்பற்றவும் வாய்ப்புள்ளது.

தமிழக ஆளுநர் பன்வாரிலாலை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

காவிரியில் நமக்கான உரிமையை அரசியல்வாதிகள் குளறுபடி செய்து தட்டிபறிக்கின்றனர்: கமல்..

Recent Posts