காரைக்கால் வாஞ்சூரில் செயல்பட்டு வரும் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்கமதி செய்வதால் துறைமுகம் அருகில் உள்ள நாகூர் மக்கள் பல நோய்களுக்கு ஆளாகிவருகிறார்கள், சுற்றுப்புறங்களில் காற்று மாசடைந்து வருகிறது எனக் குற்றம் சாட்டி வந்தனர்.இந் நிலையில் நிலக்கரி இறக்குவதற்கு தடை விதிக்க வலியுறுத்தி நாகூரில் சுமார் 3000 பேர் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் தமுமீன் அன்சாரி,சீமான்,இயக்குனர் கவுதமன் போன்றோர் கலந்து கொண்டனர்.