முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:
கடந்த 4 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீது சுமத்தப்பட்ட கூடுதல் வரிச்சுமை ரூ.6 லட்சம் கோடி. பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. ஆனால், மக்களுக்கு கொஞ்சம்கூட நிவாரணம் கிடையாது. கூடுதலாக கிடைத்த ரூ.6 லட்சம் கோடியில் ஒரு பகுதியை நிவாரணமாக மக்களுக்கு தந்திருக்க வேண்டுமா, இல்லையா?
கச்சா எண்ணெய் விலை குறைகிறது. ஆனால், மக்களுக்கு வரிச்சுமை கூடுகிறது. எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்கு தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதன்மூலம் நடப்பது மக்கள் விரோத அரசு என்பது உறுதியாகியுள்ளது.
இவ்வாறு அந்த பதிவில் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பெட்ரோலியப் பொருட்கள் மீது கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும், தற்போதைய பாஜக ஆட்சியிலும் விதிக்கப்பட்ட வரி விகிதத்தை பட்டியலிட்டுள்ளார்.