புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி அனந்தலட்சுமி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அனந்தலட்சுமி மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்தது.

இந்தநிலையில் புதுச்சேரி மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி அரசு வார்டு மறுவரையறை செய்து உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும். தேர்தலை நடத்தாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தல் நடத்தாமல் இருப்பதும் சட்டவிரோதம் தான் எனக் கூறியுள்ளது.

காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது: டிடிவி தினகரன்..

‘காலா’ படத்தின் ஆடியோ நாளை வெளியீடு!

Recent Posts