கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.
வரும் 12ஆம் தேதி கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து 15ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் ஜெயாநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார்(59) மாரடைப்பால் உயிரிழந்ததன் காரணமாக, அங்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களும், சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவகவுடா, எடியூரப்பா உள்ளிட்ட மாநிலத் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
சித்தராமையா தலைமையில் ஆளும் காங்கிரஸ் தக்கவைக்குமா அல்லது மோடியின் சூறாவளியில் சிக்கி ஆட்சியை இழக்குமா..
மே-15-ந்தேதி தெரிய வரும்.