தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ. குமெரெட்டியாபுரம் கிராம மக்களின் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இதையடுத்து, தூத்துக்குடி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரகணக்கான கிராம மக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட முயற்சி செய்தனர். இதை எதிர்த்த காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனினும், போலீஸ் தடையையும் மீறி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை கவிழ்த்ததோடு, போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், தற்போது வரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில், தலா ரூ.10 லட்சம் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.