தமிழகம், புதுச்சேரியில் 10 லட் சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. காலை 9.30 மணிக்கு அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் கடந்த ஆண்டு 94.4% பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தங்கள் பதிவெண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
சிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் 96.4%, மாணவர்கள் 92.5% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் 98.5% தேர்ச்சியுடன் 10 ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடம்
ஈரோடு மாவட்டம் 98.38% தேர்ச்சியுடன் 10 ஆம் வகுப்புத் தேர்வில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
1687 அரசுப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
ஈரோடு மாவட்டம் 98.38% தேர்ச்சியுடன் 10 ஆம் வகுப்புத் தேர்வில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. விருது நகர் மாவட்டம் 98.26% தேர்ச்சியுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் 98.07% தேர்ச்சியுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் 97.94% தேர்ச்சியுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
பாட வாடியான தேர்ச்சி விகிதம் வெளியீடு:
மொழிப்பாடத்தில் 96.42% தேர்ச்சி. ஆங்கிலத்தில் 96.50% தேர்ச்சி. கணிதத்தில் 96.18% தேர்ச்சி. அறிவியலில் 98.47% தேர்ச்சி. சமூக அறிவியலில் 96.75% தேர்ச்சி.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,336. இவற்றில் மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 7,083. உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 5,253.
5584 பள்ளிகள் 100% தேர்ச்சி.
401க்கு மேல் 2,06,796 மாணவ மாணவிகள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் மாணவர்களின் எண்ணிக்கை 2,06,796. மாணவியரின் எண்ணிக்கை 1,27,846.