மலேசிய அமைச்சரவையில் 5 தமிழர்கள்…


மலேசியா நாடாளுமன்றத்தில் முதன்முறையாக ஐந்து இந்தியர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த ஐவரில் நான்கு பேர் தமிழர்கள் என்பது கூடுதல் சிறப்பு.

கடந்த மே மாதம் மலேசியா நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், 60 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்த பாரீசன் தேசியக் கட்சியை மஹாதீர் முகமது தலைமையிலான கூட்டணி வீழ்த்தியது. மஹாதீர் முகமது பிரதமரானார். மலேசிய வரலாற்றில் இது மாபெரும் வெற்றியாகக் கருதப்பட்டது. பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து மஹாதீர் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாகத் தன் அமைச்சரவையை மஹாதீர் விரிவாக்கம் செய்துள்ளார். முதலில் 13 அமைச்சர்களுடன் ஆட்சி அமைத்த மஹாதீர் தற்போது அமைச்சரவையை விரிவாக்கம் செய்து கூடுதலாகப் 15 பெயர்களை அறிவித்துள்ளார்.

மலேசியா அமைச்சரவை பட்டியல் இன மத வேறுபாடுகளைத் தகர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள், சீனர்கள் உள்ளிட்டவர்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சீனர் மலேசியாவின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமன்றி 28 பேர் கொண்ட மலேசிய அமைச்சரவையில் 5 பேர் இந்தியர்கள். அந்த 5 பேரில் நான்கு பேர் தமிழர்கள். மலேசிய நாடாளுமன்றத் தேர்தலில் நின்ற சில தமிழ் வேட்பாளர்கள் 40,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இல்லாத அதிகாரத்தை வைத்து மிரட்டுகிறார் ஆளுநர்: வேல்முருகன் கண்டனம்..

காரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…

Recent Posts