பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது, மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
கோவை நரசிபுரத்தில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் லோகேஸ்வரி என்ற மாணவியும் கலந்து கொண்டார். இவர் 2வது மாடியில் இருந்து குதிக்க தயாராக இருந்தார்.
அப்போது அருகிலிருந்த பயிற்சியாளர் மாணவியின் இடுப்பில் கயிறு கட்டாத நிலையில், கீழே தள்ளிவிட்டார். இந்நிலையில் மாணவர்கள் வலையுடன் கீழே காத்திருந்தனர்.
இந்த சூழலில் விழும் போது, எதிர்பாராதவிதமாக சன்ஷேடில் அடிபட்டு வலையில் விழுந்தார். இதில் லோகேஸ்வரி படுகாயமடைந்தார்.
தையடுத்து முதலுதவி சிகிச்சை அளித்த அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தார். இந்த சம்பவம் சக மாணவ, மாணவிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.