பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்: இம்ரான்கான் கட்சி முன்னிலை..


பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுதேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் முன்னிலையில் உள்ளார். 272 இடங்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் 3,459 வேட்பாளர்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று வாக்குபதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 372 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 188 தொகுதிகளுக்கான முன்னிலை குறித்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

64 தொகுதிகளில் இம்ரான் கட்சி முன்னிலை வகிக்கிறது. நவாஸ் கட்சி 46 இடங்களிலும் பெனாசிர் பூட்டோ கட்சி 28 இடங்களிலும், பிற கட்சிகள் 50 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன்.

தனிப் பெரும்பான்மை பெற 137 இடங்களை வெல்ல வேண்டும்.


 

அமராவதியில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவேன்: சந்திரபாபு நாயுடு

பாகிஸ்தான் தேர்தல் இம்ரான்கான் கட்சி அதிக இடங்களில் தொடர்ந்து முன்னிலை –

Recent Posts