பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வரும் 14-ம் தேதி பதவியேற்கலாம் என தகவல் வெளியாகியள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு கடந்த மாதம் 24-ம் தேதி பொதுத்தேர்தல் நடந்து, அன்றே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனினும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பி.டி.பி. எனப்படும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி மற்றும் அவரது கூட்டணி கட்சிகள் 116 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
இதையடுத்து இம்ரான்கான் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அடுத்த பாக். பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசியல் சாசனப்படி தேர்தல் நடந்து 21 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தை அதிபர் கூட்டி, புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைக்க வேண்டும்.
சபாநாயகர் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்படி, ஆகஸ்டு 15-ம் தேதிக்குள் புதிய அரசு அமைய வேண்டும். எனவே இம்ரான்கான் வரும் 14-ம் தேதி பிரதமராக பதவியேற்கலாம் என தெரிகிறது.