சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.
சுதந்திரதினக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றிய முதலமைச்சர் கூறியதாவது:
அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்கம் வெள்ளி அல்லது வெண்கலப்பதக்கம் வென்றாலோ அல்லது நமது நாட்டின் சார்பாக கலந்துக்கொண்டாலோ அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும். தமிழ்நாடு அல்லது தமிழ்நாடு அரசின் பொது நிறுவனங்களில் குறிப்பிட்ட பதவிகளில் தகுதியின் அடிப்படையில் 2% வரை விலையாட்டு வீரர்களுக்கு உள் ஒதுக்கீடாக வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக தலைமை செயலாளர் தலைமையில் ஒர் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
தியாகிகளின் குடும்பத்தினர் இந்த அரசால் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.
இயற்கை அன்னையின் அருளால் மேட்டூர் அணை இரண்டு முறை நிரம்பி உள்ளது.
நான் ஒரு விவசாயி என்பதால் விவசாய வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். கூட்டு பண்னண விவாசாயம், நீரா பான தயாரிப்பு, குடி மராமத்து திட்டம், அத்தி கடவு அவிநாசி திட்டம் போன்றவை அவற்றில் குறிப்பிடத் தக்கவையாகும். புதிய அணைகள் கட்டவும், இருக்கும் அணைகளை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் 2019 ஜனவரி 1முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்படுகிறது. இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் 4,880 கோடி ரூபாய்மதிப்பீட்டில் 27.80 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்
CM Edappadi Palanisamy hosted the national flag at Saint George Fort