ஆக., 22ல் பக்ரீத் பண்டிகை : தலைமை காஜி அறிவிப்பு..


‘தமிழகத்தில், வரும், 22ல், பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்’ என, தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.

முஸ்லிம்களின், பக்ரீத் பண்டிகை, 22ல், கொண்டாடப்படும் என, அரசின் காலண்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமை காஜி சலாஹூதீன் முகமது அய்யூப், நேற்று அறிக்கை வெளியிட்டார்.

அதில், ‘தமிழகத்தில், 12ல், துல்ஹஜ் பிறை பார்க்கப்பட்டது. எனவே, பக்ரீத் பண்டிகை, 22ல், கொண்டாடப்படும்’ என, குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், துல்ஹஜ் பிறை ஒரு நாள் தள்ளி தெரிந்ததால், 23ல், பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என, புதுடில்லி ஜாமா மஸ்ஜித் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதனால், டில்லியில் மட்டும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு, 23ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


 

ஆசிய விளையாட்டில் இருந்து லியாண்டர் பயஸ் விலகல்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி..

Recent Posts