வேலூர் அருகே ஆசிரியர் பயிற்சித் தேர்வில் வென்றவர் தற்கொலை!

 

வேலூர் அருகே ஆசிரியர் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மீண்டும் நியமனத் தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்பால் மனமுடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த மலைமேடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(27) இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. விலங்கியல் பாடத்தில் Msc,B.ed முடித்த ஜெயப்பிரகாஷ், எம்.பில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு  நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதினா.ர். தேர்வு முடிவு வெளியாகும் இடைப்பட்ட காலத்தில் படித்த படிப்புக்கு வேலைக்கிடைக்காத காரனத்தால் தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டு, அதில் ஜெயபிரகாஷ் அதிக மதிபென் பெற்று தேர்ச்சி பெற்றார் இதனிடையே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடிந்து அரசு ஆசிரியர் பணிக்காக ஜெயப்பிரகாஷ் காத்திருந்தார். இந்நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் மீண்டும் ஆசிரியர் நியமன தேர்வு எழுத வேண்டும் என  அண்மையில் தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜெயப்பிரகாஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஜெயப்பிரகாஷ் தற்கொலை செய்வதற்கு முன்னதாக கைப்பற்றப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் இரு கடிதங்கள் வெளியாகி உள்ளன. அக்கடிதத்தில்  தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட ஆசிரியர் நியமன தேர்வே தன் தற்கொலைக்கு காரணம் எனவும் இந்த புதிய தேர்வால் தனக்கு வேலை கிடைக்கபோவது இல்லை என்றும், தமது சாவிற்க்கு தமிழக அரசே பொறுப்பேற்க்கவேண்டும் எனவும் ஜெயப்பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தும் மன உளைச்சலால் ஜெயப்பிரகாஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரையும், உறவினர்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிரவ் மோடியைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சிபிஐ கோரிக்கை

ஸ்டாலின் தலைமையில் `பொதுக்குழுக் கூட்டம்’ : தி.மு.க அறிவிப்பு

Recent Posts