கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் 7 மதகுகள் உடைப்பு..


கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் உள்ள 7 மதகுகளும் உடைந்து வெள்ளத்தில் அடித்து சொல்லப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து கரையோர கிராம மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொள்ளிடம் அணையில் மொத்தம் உள்ள 45 மதகுகளில் தற்போது 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

அணையின் 7 மதகுகள் உடைந்து அதன் வழியாக தண்ணீர் வெளியேறி வருவதை அடுத்து கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில்வசித்து வரும் மக்கள்பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1834-ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் காலத்தில் முக்கொம்பு மேலணை கட்டப்பட்டது. அணையின் 7 மதகுகள் உடைந்ததை அடுத்து பாலமும் உடைந்தது. இதில் 90 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது. இதனையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாலம் உடைந்ததையடுத்து அப்பகுதியில் பாலத்தின் மீது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
விவசாயத்திற்கு பாதிப்பில்லை

அணையின் மதகுகள் உடைந்த போதிலும் விவசாயத்திற்கு திறந்து விடப்படும் நீரில் பாதிப்பு ஏற்படாது என மாவட்ட கலெக்டர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக வளர சுப்பிரமணிய சாமி ஆலோசனை..

பிரபல எழுத்தாளரும்,பத்திரிக்கையாளருமான குல்தீப் நய்யார் மரணம்

Recent Posts