அதிமுக செயற்குழு கூட்டம், அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று நடக்கிறது. இதில் திருவாரூர், திருப்பரங் குன்றம் இடைத்தேர்தல், நாடாளு மன்ற தேர்தல் குறித்து ஆலோசிக் கப்பட உள்ளதாக தெரிகிறது.
அதிமுக செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 20-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் திடீரென கூட்டம் 23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவ லகத்தில் இன்று மாலை 4 மணிக்கு செயற்குழு கூட்டம் நடக்கிறது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங் கிணைப்பாளர் கே.பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.வைத்திலிங்கம், கே.பி.முனு சாமி மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்டச் செயலாளர் கள் என 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் சசிகலாவின் தலைமையை ஏற்க மறுத்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சிலர் பிரிந்து சென்றனர். அதன்பின், முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்பட்டது. தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக் குப் பிறகு டிடிவி தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி ஓபிஎஸ் – இபிஎஸ் அணியினர் இணைந் தனர். அவர்கள் இணைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் தற்போது 2-வது முறையாக செயற்குழு கூட்டம் நடக்கிறது.
வழிகாட்டுதல் குழு
இரு அணியினரும் இணைந்த போது, கட்சியில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஓராண்டு ஆகியும் இதுவரை அந்தக் குழு அமைக்கப்படவில்லை. இது தொடர்பாக மாவட்டச் செயலாளர் கள் கூட்டத்திலேயே நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் உள்ள தொண்டர்கள் எண் ணிக்கை குறைந்துள்ளது குறித் தும் நிர்வாகிகளின் நிலைப்பாடு குறித்தும் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, குறிப்பிட்ட நாட்களுக்குள் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகளுக்கு ஒருங் கிணைப்பாளர்கள் அறிவுறுத் தினர். தற்போது உறுப்பினர் சேர்ப்புப் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், திருப்பரங் குன்றம், திருவாரூர் தொகுதி கள் காலியாகி உள்ளன. இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை எப்போது வேண்டுமானாலும் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப் புள்ளது. நாடாளுமன்றத் தேர் தலும் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாகவும் செயற்குழுவில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
அமமுக துணை பொதுச்செய லாளர் டிடிவி தினகரன், நாடாளு மன்ற தொகுதி வாரியாக பொறுப் பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளார். பல தொகுதிகளுக்கு சென்று மக்களையும் சந்தித்து வரு கிறார். தினகரனின் தேர்தல் வியூகங்களை எதிர்கொள்வது பற்றியும் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாக அடிப்படையில் கட்சியில் மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்துதல் போன்றவை குறித் தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.