என் தந்தையை கொன்ற பிரபாகரன் கொல்லப்பட்டபோது வேதனை அடைந்தேன்: ராகுல் பேச்சு..


விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மரணம் அடைந்த போதுதான் மிகவும் துயரமடைந்ததாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி ஹம்பர்க் நகரில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
தீவிரவாதம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராகுல்காந்தி, தன் தந்தையை கொன்றவர் இறந்தபோது நான் மகிழ்ச்சி அடையவில்லை என்று கூறினார்.

இந்தியாவின் வளர்ச்சி மதசார்பின்மை உள்ளிட்ட கேள்விகளுக்கும் ராகுல்காந்தி பதிலளித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் கிடைக்க கூடாது. இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட உயர் வகுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக அரசு செயல்பட்டு வருவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.


 

கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் 19,570 கனஅடி உபரிநீர் திறப்பு..

வெளிநாட்டு உதவிகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் : வைகோ வலியுறுத்தல்..

Recent Posts