எச்சரிக்கை திரை விமர்சனம்..
அனைவரையும் திரும்பி பார்க்கவைத்த லட்சுமி, மா என்ற குறும்படங்களை இயக்கி வெற்றிகண்ட சர்ஜுன் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் எச்சரிக்கை.
பாலியல் சம்பந்தப்பட்ட குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் எச்சரிக்கை படத்தில் என்ன விஷயத்தை கூற வந்திருக்கிறார் என்பதை பார்ப்போம்.
கதைக்கரு
கிஷோர்-புதுமுகம் விவேக் ராஜ கோபால் இவர்கள் தான் கதையின் முக்கிய கதாபாத்திரம். கிஷோர் விவேகம் ராஜ கோபாலின் மாமா, இருவரும் 20 வருடங்கள் கழித்து சந்திக்கிறார்கள். இருவருக்குமே பணம் தேவைப்படுகிறது,
எப்படி பணம் சம்பாதிக்கலாம், கடத்தல் வேலை செய்யலாமா என்று முடிவு செய்து தன்னுடைய காதலியையே கடத்தி பணம் சம்பாதிக்கலாம் என விவேக் நினைக்கிறார், இந்த விஷயம் கிஷோருக்கு தெரியாது.
அந்த காதலி தான் வரலட்சுமி, அவரின் அப்பா பெண்ணை காப்பாற்ற போலீஸ் கமிஷ்னரான சத்யராஜை நாடுகிறார். சத்யராஜ் மகளுக்கு ஒரு கொடிய நோய் இருக்கிறது,
அவருக்கும் பணம் தேவை. இப்படி கதையில் வரும் அனைவருக்கும் பணம் தேவைப்படுகிறது. கடைசியில் இவர்களுக்கு தேவைப்படும் பணம் எப்படி கிடைக்கிறது என்பதை மிகவும் சுவாரஸ்யமாக கூறியிருக்கிறார் இயக்குனர்.
படம் பற்றி ஒரு பார்வை
படத்தின் ஆரம்பமே மிகவும் எதார்த்தமாக சூப்பராக செல்கிறது, அதன்பிறகு எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லை. காமெடிக்காக யோகி பாபு இருந்தாலும் அவரை சரியாக பயன்படுத்தப்படவில்லை.
முதல் பாதி கொஞ்சம் டல் அடித்தாலும் இடைவேளைக்கு பிறகு படம் சூப்பராக செல்கிறது, கடைசி 30 நிமிடம் சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறது. டுவிஸ்ட் நிறைய வைத்து சுவாரஸ்யமாக நகர்த்திருக்கிறார் இயக்குனர்.
என்ன தான் கிரைம் திரில்லராக இருந்தாலும் காதல், உறவின் முக்கியத்துவம் என எல்லாவற்றையும் மக்களுக்கு புரியும் படி சொல்லியிருப்பது சூப்பர்.
குறிப்பாக சத்யராஜ் தன்னுடைய மகளுக்காக பணத்தை எரித்து காப்பாற்றுவது செம எமோஷ்னலாக இருந்தது. இப்படி படத்தில் நல்ல விஷயம் இருந்தாலும் படத்தின் நீளம் கொஞ்சம் நெருடலாக இருந்தது.
ப்ளஸ்
சத்யராஜ்-மகள் காட்சிகளில் நடிப்பு அசத்தல்,
ஒரு கிரைம் திரில்லரில் சென்டிமென்ட் விஷயங்கள் வைத்தது.
மைனஸ்
படத்தின் நீளம்
மொத்தத்தில் முதலில் நம்மை சோதித்தாலும் இறுதியில் சீட்டின் நுனியில் உட்கார வைத்து எச்சரிக்கிறார் இயக்குனர். ஒரு முறை பார்க்கலாம்