ஆசிய விளையாட்டுப் போட்டி : பெண்கள் வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி..


இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் வில்வித்தை போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

இறுதிப்போட்டியில் கொரிய அணியிடம் 228-231 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது.

ஆசிய விளையாட்டு போட்டியில் 8 தங்கம், 14 வெள்ளி, 20 வெண்கலம் என 42 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் உள்ளது இந்தியா