பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய ஊழல் என்பது ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் இருந்து தெரிய வந்திருப்பதாக ராகுல்காந்தி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுகல் காந்தி கூறியதாவது:
பதினைந்து இருபது பணக்காரர்களுக்கு உதவுவதற்காக நாட்டு மக்களை வஞ்சித்திருக்கிறார் மோடி. உங்கள் பைகளில் இருந்த பணத்தை எடுத்து சில முதலாளிகளுக்கு வழங்கி இருக்கிறார். பணமதிப்பிழப்பின் மூலம் தடை செய்யப்பட்டதில் ரூ. 10,720 கோடி மட்டுமே திரும்ப வரவில்லை. பாக்கி 99.3 % ரூபாய் நோட்டுகளும் திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கியே தெரிவித்துள்ளது. இதில் இருந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய ஊழல் என்பது நிரூபணமாகி உள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, அரசுக்கு பயப்படாமல் நினைப்பதை சுதந்திரமாக எழுத உங்களால் முடிகிறதா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். தற்போதைய நாட்டு நிலைமையின் படி, செய்தியாளர்கள் உள்பட பலர் தங்கள் பணியை செய்வதில் தயக்கம் கொண்டு உள்ளனர் என்று தெரிவித்தார்.
செய்தியாளர்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து தொடர்ந்து நெருக்குதல்கள் வருவதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். ரஃபேல் போர் விமான பேரம் குறித்து எழுதும் செய்தியாளர்கள் மோடியின் ஆதரவாளர்களால் மிரட்டப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
Notes Ban Nothing Less Than Huge Scam, Says Rahul Gandhi,