தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சிதம்பரம், விழுப்புரத்தில் தலா 9 செ.மீ, பரங்கிப்பேட்டை, கடலூரில் தலா 8 செ.மீ மழைப்பதிவாகியுள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.