தமிழகத்தில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: அத்தியாவசியப்பொருள்களின் விலை உயரும் அபாயம்….


தமிழகத்தில் உள்ள 14 சுங்கச்சாவடி களில் 5 முதல் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இரு பிவுகளாக சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருவதன் அடிப்படையில் இக்கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வாகனங்கள் பதிவு செய்யப்படும்போதே சாலைவரி வசூலிக்கப்படும் போது சுங்கக்கட்டணம் கேட்பது ஏன் என்று வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சுங்கக்கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்பதால் அதனை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை தடா சாலையில் நல்லு, சேலம் குமாரபாளையம் சாலையில் ஸ்ரீவைகுண்டம், மதுரை-தூத்துக்குடி சாலையில் எலியாபதி, கொடைக்கானல்- கொடை ரோடு, மேட்டுப்பட்டி, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

இதேபோல பொன்னம்பலம் பட்டி, நத்தக்கரை, புதூர், பாண்டியம்பட்டி, திருமந்துறை சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது..

60 வயது மாநிறம் : திரை விமர்சனம்..

Recent Posts