நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு நெருக்கடியா?: உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுவதாக வெளியான தகவல் குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கமளித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதாகக் கூறப்படுவது பற்றிச் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

மத்திய அரசு நெருக்குதலாலேயே நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதாகக் கூறப்படுவதையும் அமைச்சர் காமராஜ் மறுத்தார். அக்டோபரில் இருந்து புதிய விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படும் என்பதால் கிடங்குகளில் பராமரிப்புப் பணிக்காக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் நெல் கொள்முதல் நிறுத்தப்படுவது வழக்கம் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

Food Minister Kamaraj Explanation

பெண்கள் ஸ்குவாஷ் குழு பிரிவில் வெள்ளி வென்றவர்களுக்கு தலா ரூ.30 லட்சம்: முதலமைச்சர் ஈபிஎஸ்

மும்பையில் முக்கி முணகி ஓடும் மோனோ ரயில்: நல்ல வேளையாக தப்பித்தது சென்னை!

Recent Posts