மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளையிலுள்ள வீட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
திமுகவில் தலைவராக இருந்தது முதல், இறக்கும் வரை தலைவராகவே இருந்தவர் மு.கருணாநிதி. இவரது மறைவைத் தொடர்ந்து திமுகவின் செயல் தலைவரும், கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்றார்.
இந்த நிலையில், கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரில் உள்ள திருக்குவளையில் இருக்கும் கருணாநிதியின் இல்லத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் சென்றுள்ளார்.
தனது தந்தையின் வீட்டிற்கு சென்ற ஸ்டாலின் தனது நினைவுகளை பதிவேட்டில் எழுதி பகிர்ந்துள்ளார். அதில், தலைவர் அவர்களின் பிறந்த ஊர் திருக்குவளைக்கு பலமுறை வந்துள்ளேன்.
தலைவர் அவர்களுடன் வந்துள்ளேன். தனியாகவும் வந்துள்ளேன். இன்று திமுகவின் தலைவராக வந்துள்ளேன். கழகத்தின் தலைவராக நான் வந்திருந்தாலும், தலைவர் கலைஞர் அவர்களின் தொண்டனாக, அவர் காட்டிய வழியில் தான் எனது பயணம்
தொடர்ந்து தொடரும்…
வாழ்க கலைஞர்! என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.