ஓரினச்சோ்க்கை குற்றம் என்று வரையறுக்கும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377ஐ நீக்கக் கோாிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீா்ப்பு வழங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தியா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் ஓரினச்சோ்க்கை அங்கீகரிக்கப்படாததால் அவை தற்போது வரை குற்றச் செயலாகவே கருதப்படுகிறது. மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிாிவு ஓரினச் சோ்க்கை குற்றச் செயல் என்று குறிப்பிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு இந்த சட்டத்தை பயன்படுத்தி 10 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை வரை வழங்க வழிவகை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சட்டப் பிாிவு 377ஐ நீக்கக் கோாி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சுய விருப்பத்துடன் ஓரினச்சோ்க்கையில் ஈடுபடுபவா்களை தண்டிக்கக் கூடாது என்றும் அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. சட்டப் பிாிவு 377ஐ நீக்கக் கூடாது என்றம் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கா், சந்திரசூட், நாரிமன், இந்து மல்கோத்ரா ஆகியோா் அடங்கிய அரசியல் சாசன அமா்வு மேற்கொண்டது.
கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது. சட்டப்பிாிவு 377ஐ நீக்கக் கோாிய மனுதாரரின் வழக்கறிஞா், ஒரு சட்டத்தை நீக்க வேண்டுமா? திருத்த வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டியது நாடாளுமன்றம் மன்றும் பேரவைகளின் வேலை என்று தொிவித்தாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒருவேளை அத்தகைய சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்குமானால், அதை அரசாங்கமே திருத்தட்டும் என நீதிமன்றங்கள் காத்துக் கொண்டிருக்காது என்று தொிவித்தனா்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீா்ப்பு வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.