ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய 7 பேரும் தண்டனைக்காலம் முடிந்தும் சிறையிலிருக்கின்றனர்.
இவர்களில் மூவரின் துாக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருந்து வருகின்றனர்.
இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.