NSG எனப்படும் அணுசக்தி விநியோக குழுவில் இடம்பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் இந்தியாவுக்கு உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
என்எஸ்ஜி எனப்படும் அணுசக்தி விநியோக குழுவில் இடம்பெற இந்தியா தீவிர முயற்சி செய்கிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆனால், சீனாவின் எதிர்ப்பு காரணமாக இந்தியாவால் இடம்பெற முடியவில்லை.
இந்நிலையில், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க அரசின் முதன்மை துணை செயலர் ஆலிஸ் வெல்ஸ் கூறுகையில், என்எஸ்ஜி ஒருமித்த கருத்து அடிப்படையில் உள்ள அமைப்பு.
இந்த குழுவில் சீனாவின் எதிர்ப்பு காரணமாக இந்தியாவால், இடம்பெற முடியவில்லை. இதனால், இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படுவதை நாங்கள் நிறுத்த மாட்டோம்.
என்எஸ்ஜியில் உறுப்பினராக அனைத்து தகுதிகளையும் இந்தியா பெற்றுள்ளது. இதற்காக, இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தொடர்ந்து செயல்படும் என்றார்.