முத்தலாக் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

முத்தலாக் முறையைத் தடை செய்யும் மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை, முஸ்லீம்களிடையே இருந்து வருகிறது.

இதற்கு தடை விதிக்கும் வகையில் முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள்

பாதுகாப்பு சட்ட மசோதா கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மக்களவையில் நிறைவேறியது.

ஆனால் மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் இல்லாததால், பாஜக அரசால் நிறைவேற்ற முடியவில்லை.

கடந்த மழைக்கால கூட்டத் தொடரிலும், முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்தது.

ஆனால் ஒருமித்த கருத்து ஏற்படாததால் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து அவசர சட்டம் மூலம் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கட்டாய முத்தலாக்கை ரத்து செய்யும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

3 அவசர சட்டங்கள் மூலம் முத்தலாக் கூட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

கட்டாய முத்தலாக் தடை சட்டம் மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள நிலையில் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து தற்போது, முத்தலாக் முறையைத் தடை செய்யும் மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஊழல் வழக்கில் கைது..

சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மருத்துவமனையில் அனுமதி ..

Recent Posts