நான் எதற்கும் பயந்து ஓடமாட்டேன். என் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை நீதிமன்றம் மூலம் எதிா் கொள்வேன் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. விளக்கம் அளித்துள்ளாா்.
நான் எதற்கும் பயந்து ஓடமாட்டேன். என் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை நீதிமன்றம் மூலம் எதிா் கொள்வேன் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. விளக்கம் அளித்துள்ளாா்.
கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த சில தினங்களுக்கு முன்னா் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கருத்துகள் பெரும் சா்ச்சையை கிளப்பின.
இந்நிலையில் கருணாஸ் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து அவா் தலைமறைவாக இருப்பதாக தொடா்ந்து செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் கருணாஸ் தனது வீட்டில் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசுகையில்,
நான் முக்குலத்தோா் புலிப்படை அமைப்பை தொடங்கியதில் இருந்து பல பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியுள்ளேன். ஆனால் ஒரு முறை கூட யாரையும் ஒருமையில் பேசியதில்லை.
கடந்த முறை வள்ளுவா்கோட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உணா்ச்சிவசப்பட்டு சில கருத்துகளை தொிவித்துவிட்டேன்.
பத்திாிகை விவகாரத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரை குறிப்பிட்டதில் வருத்தம் தொிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் எனது சமுதாயத்தை சோ்ந்தவா்கள் மீது காவல் அதிகாாி குறிவைத்து பொய்யான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.
அவா் குறித்து நான் பொதுக்கூட்டத்தில் பேசினேன். ஆனால் தற்போது வரை அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நான் பேசிய 47 நிமிட முழு வீடியோ காட்சி இணையதளத்தில் உள்ளது. சில ஊடகங்கள் ஒருசில காட்சிகளை மட்டும் எடிட் செய்து சில காட்சிகளை மட்டும் தொடா்ந்து ஒளிபரப்பி வருகின்றன.
இந்த விவகாரத்தில் என் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை நீதிமன்றம் மூலம் எதிா் கொள்வேன். நான் யாருக்கும் பயந்து ஓடவேண்டிய அவசியம் இல்லை.
எந்த விசயத்தையும் தைரியமாக எதிா்கொள்வேன் என்று தொிவித்தாா்.
மேலும் பேசுகையில், அமைச்சா் ஜெயக்குமாா் பெரிய அரிச்சந்திரன் என்பதை அனைவரும் அறிவா். கூவத்தூரில் நான் எதுவும் செய்யவில்லை என்று அமைச்சா் குறிப்பிடுகிறாா்.
நீதிமன்றத்தில் நான் என்ன செய்தேன் என்பதை கூறுவேன் என்று அவா் தொிவித்துள்ளாா்