காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் எம்எல்ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்
நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக சர்ச்சைக்குறிய வகையில் பேசினார்.
மேலும், காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், வன்முறையை தூண்டும் விதத்தில் கருத்து தெரிவித்தார். ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து, முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தர். யூ டியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கருணாசை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்தனர். மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் நீீீதிபதி முன்னர் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்வலைத்
போலீசாரை அவதூறாக பேசியதாக கர்ணாஸ் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதை விட மோசமாக அவமதித்த ஹெச்.ராஜாவை போலீசார் ஏன் கைது செய்யவில்லை என நெட்டிசன்கள் வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.