தோழர் இப்படி ஒரு நடிகை இனி பிறப்பாளா ? நடிகை என்பதை விட அவங்க நல்ல மனம் கொண்ட பெண் , மனிதாபிமானி !
எல்லாரும் அவங்க உடம்பதான் பாத்தாங்க ! அவங்ககுள்ள இருந்த மனசு எத்தனைப் பேருக்குத் தெரியும் ?
எல்லா நடிகைகளுக்கும் கல்யாணமானா மார்கெட்டுப் போயிடும் ! விஜயலட்சுமி வயசுக்கு வந்த உடனேயே பெற்றோர்கள் அவங்களுக்கு திருமணம் செஞ்சி வச்சுட்டாங்க !
தமிழக ஆண்களின் கனவுக்கன்னியா வரப்போறவங்க, ஒரு ஆணின் பொண்டாட்டியா இருந்திட முடியுமா ?
அந்த ஆந்திரப் புயல் சென்னைக் கரையைக் கடந்தது !
வண்டிச்சக்கரம் படத்தில் விணு சக்கரவர்த்தி அறிமுகம் செய்த போது நானும் அப்படத்தில் வேலை செய்தேன் !
காலை 6 மணிக்கெல்லாம் ஓட்டல் அறையின் கதவைத் தட்டுவேன் அன்றையக் காட்சியை விவரிக்க ! பல நிமிடங்கள் கழித்தே சிலுக்கு கதவைத் திறப்பார் !
” மேடம் ரெடியாகுங்க . 8 மணிக்கு படபிடிப்பு என்பேன்” !
” பாலு நான் இன்னும் தூங்கவே இல்லையே ” ! என்பார் அழுதபடி !
சற்று முன் தான் கிளம்பினாராம் அந்த மார்கண்டேயே நடிகர் !!!!!
இப்படி வண்டிச்சக்கரம் முழுவதும் சுழற்றப்பட்டது இந்தக் சிலுக்குச் சக்கரம் !!
பின்னர் முன்னணி நடிகையான நிலையில் , என்னை நியாபகம் வைத்திருப்பாரா ? என்ற யோசனையில் எனது திருமண அழைப்பிதழை அவருக்கு ஏ.வி.எம்மில் தந்தேன் !
எழுந்து நின்று என்னை வரவேற்றவர் அழைப்பிதழை பெற்றுக்கொண்டு , சில நிமிடங்களில் என் கையில் திருமணப்பரிசாக ஒரு பணக்கட்டை திணித்தார் !
வெளியில் வந்து பார்த்த எனக்கு இன்ப அதிர்ச்சி ! அது 10000 ரூபாய் கட்டு !!
எனது திருமணம் நடக்கக் காரணமே அந்தப் பணம்தான் !!
இப்படி அவர் பலருக்கு செய்த உதவி கொஞ்சம் நஞ்சமல்ல !!
விஜயலட்சுமி என்கிற சிலுக்கு ஸ்மிதா …உண்மையில் அள்ளித் தந்த மகாலட்சுமி !!
– பெயர் குறிப்பிட விரும்பாத ஓர் இயக்குநர்
நன்றி: தாகம்
Smitha 22th anniversary
22 ஆம் ஆண்டு நினைவுநாள்