அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த காலத்தில் வெளிநாட்டில் இருந்து வந்து பணிபுரியும் ஊழியர்களின் மனைவி மற்றும் குழந்தைகளை அமெரிக்கா அழைத்து வந்து வேலை மற்றும் படிப்பினை பெறலாம் என்பதற்காக எச்4 என்ற விசா முறை அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.
எச்-1பி விசா முறையில் பல திருத்தங்களை டிரம்ப் தலைமையிலான அரசு கொண்டு வரும் நிலையில் தற்போது எச்4 EAD விசா முறையினை 3 மாதத்தில் திரும்பப் பெறுவோம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எச்4 விசா என்றால் என்ன? வெளிநாட்டில் இருந்து வந்து அமெரிக்காவில் பணிபுரியும் ஒருவர் அவரது மனைவி மற்றும் 21 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அழைத்து வர வழிவகைச் செய்வதே எச்4 விசாவின் நன்மையாகும்.
இந்த எச்4 விசாவினை அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் ஆணையம் வழங்குகிறது.
3 மாதம் எச்-பி விசா கீழ் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் அவர்களைச் சார்ந்து உள்ளவர்களை அமெரிக்க அழைத்துச் செல்ல உதவும் எச்-4 விசா முறையினை 3 மாத்தில் நீக்குவோம் என்றும் நீதி மன்றத்தில் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
ஏன்? ஒபாமா காலத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகையில் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகள் பெரும் அளவில் பாதிப்படைந்துள்ளதாகவும்
அதனை நீக்க டிரம்ப் தலைமையிலான அரசு மிகப் பெரிய அளவில் முயற்சி எடுத்து வருவதாகவும் நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
என்ன ஆகும்? எனவே எச்-4 விசா கீழ் அமெரிக்காவில் உள்ளவர்களைத் திருப்பி அனுப்புவது மட்டும் இல்லாமல் புதியதாகவும் தங்களைச் சார்ந்தவர்களை எளிதாக அழைத்துச் செல்ல முடியாத நிலையை இந்தத் திருத்தம் உருவாக இருக்கிறது.
இதனை வெளிப்படையாகவே நீக்க இருப்பதாகவும் அமெரிக்க அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எப்போது முடிவு தெரியும்? எச்4 விசாவை நீக்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
பிப்ரவரி மாதம் முதல் இதனை நீக்குவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நவம்பர் மாதம் முழுமையாக நீக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளது.
எச்-4 விசா எண்ணிக்கை 2017 டிசம்பர் மாதம் வரை 1,26,853 நபர்கள் எச்-4 விசா கீழ் அமெரிக்காவில் உள்ளனர்.
2015-ம் ஆண்டு முதல் எச்4 விசா கீழ் எச்-1பி விசா ஊழியர்களினை சார்ந்துள்ளவர்கள் அமெரிக்கா அழைத்துச் செல்ல இது உதவியாக இருந்தது.
எந்த நாட்டுக்கு எல்லாம் பாதிப்பு? எச்-4 விசா கீழ் 90 சதவீதம் இந்தியர்களும், 5 சதவீதம் சீனர்களும், மீதமுள்ள நாடுகளில் இருந்து 5 சதவீதத்தனரும் அமெரிக்காவில் உள்ளனர்.
டிரம்ப் அரசின் இந்த முடிவால் தங்கள் குடும்பத்தினரை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து வருகின்றனர்.